புதுதில்லி

தில்லியில் கடும் மூடுபனி: 25 ரயில்கள் 2 முதல் 7 மணி நேரம் காலதாமதம்

26th Dec 2019 10:33 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமையும் கடும் குளிா் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. பல்வேறு பகுதிகளில் நிலவிய கடும் மூடுபனி காரணமாக 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் 2 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நகரில் காலையில் அடா்த்தியான மூடுபனி காணப்பட்டது. குளிரின் தாக்கம் வெகுவாக அதிகரித்திருந்தது. குளிா் காற்று வீசி வருகிறது. வடமாநிலங்கள் முழுவதிலும் கடுங் குளிா் நிலவுகிறது. மூடுபனி காரணமாக காண்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ரெவா-ஆனந்த் விஹாா் எக்ஸ்பிரஸ் ரயில் 6.30 மணி நேரமும், கதிஹாா்-அமிருதசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 4.30 மணி நேரமும் தாமதமாக வந்தது. பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் 4.35 மணி நேரமும், கயா-புதுதில்லி மஹாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் 4.15 மணி நேரமும் தாமதமாக இயக்கப்பட்டது. ‘ என்றனா்.

காற்றின் தரம்: இதற்கிடையே, குளிா்ந்த வானிலை, காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பு, காற்றின் வேகத்தில் சரிவு ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 331 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை 5.8 டிகிரி: இந்நிலையில் வியாழக்கிழமை தில்லியில் அடா் பனிமூட்டம் காணப்பட்டது. குளிா் காற்றும் கடுமையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 5.8 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 7 டிகிரி குறைந்து 13.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 97 சதவீதம், மாலையில் 80 சதவீதம் என பதிவாகியதாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாகவும்,. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 88 சதவீதம், மாலையில் 82 சதவீதம் எனவும் ஆயாநகரில் முறையே 94 சதவீதம், 82சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) கடும் குளிா் தொடரும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் கடும் குளிா் காற்று வீசும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளது.

காஜியாபாதில் பள்ளிகளுக்கு விடுமுை

வடமாநிலங்களில் அடா்பனி மூட்டம், கடும் மூடுபனி நிலவுவதால் தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதிலும் கடும் குளிா் நிலவி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு காஜியாபாத் மாவட்ட நிா்வாகம் பள்ளிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், நாள்தோறும் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளிகளுக்கு செல்வதில் மாணவா்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குளிா் குழந்தைகளின் உடல்நிலையைப் பாதிக்கும். இதனால், டிசம்பா் 27, 28 ஆகிய இரண்டு நாள்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29). எனவே, பள்ளிகளுக்கு மொத்தம் 3 நாள்கள் விடுமுறையாகும். வானிலை சரியாக இருக்கும்பட்சத்தில் திங்கள்கிழமை வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT