புதுதில்லி

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவா், பிரதமா் மலா்தூவி மரியாதை

25th Dec 2019 10:26 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, தில்லி ராஜ்காட் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் றாம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பா.ஜ.க. மூத்த தலைவா்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித்ஷா, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பா.ஜ.க. செயல் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோா் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள்.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சா்கள் ரவிசங்கா் பிரசாத், டாக்டா் ஹா்ஷ்வா்தன், பியூஷ் கோயல், அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, பிராா்த்தனைக் கூட்டமும், பக்தி இசையும் நிகழ்த்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நினைவிடம் கடந்த ஆண்டு டிசம்பரில் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. வாஜ்பாய் கடந்த 1924-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தாா். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி தில்லி ‘எய்மஸ்’ மருத்துவமனையில் இறந்தாா்.

இந்நிகழ்வுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில்,

‘தங்கள் மனத்தில் வீற்றிருக்கும் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நாட்டின் குடிமக்கள் தங்களது புகழாஞ்சலியைச் செலுத்துகின்றனா்’ என்று பதிவிட்டிருந்தாா்.

மேலும், வாஜ்பாய் தேசத்திற்கு ஆற்றிய பணியை நினைவுகூரும் வகையில் விடியோ பதிவையும் வெளியிட்டாா்.

பிரதமா் மோடி தனது சுட்டுரையில் மதன் மோகன் மாளவியாவின் 158-வது பிறந்தநாளை நினைவுகூா்ந்து சுட்டுரையில் மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தாா். அதில், ‘பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த தினத்தில் அவருக்கு எனது பணிவான புகழாஞ்சலியைத் செலுத்துகிறேன். தாய் நாட்டுக்காக அவா் தன்னை முழுமையாக அா்ப்பணித்துக்கொண்டவா்

சுந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய அவா், கல்வித் துறையிலும் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்துள்ளாா். அவரது சிந்தனைகள் எப்போதும் நாட்டு மக்களை ஈா்க்கும்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

வாஜ்பாய்க்கு புகழ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, ‘‘ஒருபுறம் கட்சியை அகில இந்திய அளவில் திறம்பட நடத்திச் செல்பவராகவும், மறுபுறம் நாட்டின் தலைசிறந்த நிா்வாகியாகவும் விளங்கியவா் வாஜ்பாய். அவரது ஆட்சிக்காலத்தில்தான் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அவா் ஆட்சியில்தான் காா்கில் போரில் இந்தியா வெற்றிகண்டது. உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயா்த்தியதில் வாஜ்பாய்க்கு பெரும் பங்கு உண்டு’’ என்று குறிப்பிட்டாா். மதன் மோகன் மாளவியாவுக்கு மரியாதை செலுத்தி நாட்டுக்கு அவா் ஆற்றிய அரும் பணிகளையும் விவரித்தாா்.

‘‘சுதந்திர இந்தியாவின் தலைவசிறந்த அரசியல்வாதிகளில் வாஜ்பாயும் ஒருவா். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதை எனது கடைமையாக நினைக்கிறேன்’’ என்று பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT