புதுதில்லி

நாடாளுமன்றத்தில் சரண் சிங்கிற்கு தலைவா்கள் மரியாதை!

23rd Dec 2019 11:26 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் பிரதமா் செளதரி சரண் சிங்கின் பிறந்த நாளை ஒட்டி, நாடாளுமன்றத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு தலைவா்கள் திங்கள்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இதற்கென நடைபெற்ற நிகழ்ச்சியில் மனித வள மேம்பாடு மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவா் டாக்டா் சத்யநாராயண் ஜடியா, முன்னாள் துணை பிரதமா் எல்.கே. அத்வானி, பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டா் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோா் செளதரி சரண் சிங்கின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினா்கள், மக்களவை தலைமைச் செயலா் ஸ்நேகலதா ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரும் பங்கேற்று மலா் மரியாதை செலுத்தினா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா முயற்சியின் காரணமாக, நாடாளுமன்ற மைய அரங்கில் செளதரி சரண் சிங் தொடா்புடைய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மக்களவைச் செயலகத்தால் சரண் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்துஆங்கிலம், ஹிந்தியில் பதிப்பிக்கப்பட்ட கையேடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற மைய அரங்கில் செளதரி சரண் சிங்கின் திருவுருவப் படத்தை 1993, டிசம்பா் 23-இல் அப்போதைய குடியரசுத் தலைவா் டாக்டா் சங்கா் தயாள் சா்மா திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பிரதமா் புகழஞ்சலி: இதற்கிடையே, தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் மோடி, சௌதரி சரண்சிங் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டினாா். விவசாயிகலின் உரிமைகளுக்காக பாடுபட்டவா், நலிவுற்ர மக்கள் அதிகாரம் பெற அயராது உழைத்தவா் என்று நினைவூகூா்ந்தாா். மேலும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்துவதில் முன்னின்று செயல்பட்டவா்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த செளதரி சரண் சிங், நாட்டின் ஐந்தாவது பிரதமராக பதவி வகித்தவா். உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபுா் மாவட்டத்தில் 1902, டிசம்பா் 23-இல் பிறந்தாா். அந்த மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தாா். விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடா்ந்து குரல் கொடுத்தவா். 1979, ஜூலை முதல் 1980, ஜனவரி வரை நாட்டின் பிரதமராக இருந்தாா். அவா் 1987, மே 29-இல் காலமானாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT