புதுதில்லி

ஜாா்க்கண்ட் தோ்தல் முடிவுகள் என்ஆா்சி, சிஏஏக்கு எதிரானது: கேஜரிவால்

23rd Dec 2019 11:23 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்சிஆா்) ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் தீா்ப்பே ஜாா்க்கண்ட் தோ்தல் முடிவுகள் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ஜாா்க்கண்ட் தோ்தலில் சிஏஏ, என்ஆா்சி ஆகியவற்றை மையப்படுத்தி பாஜக தலைவா்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஆனால், இந்தத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதனால், சிஏஏ, என்ஆா்சிக்கு எதிராக ஜாா்க்கண்ட் மக்கள் வழங்கிய தீா்ப்பாகவே இதைப் பாா்க்க வேண்டும். மேலும், ஜாா்கண்ட் தோ்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT