புதுதில்லி

மாணவா்களை தூண்டிவிடும் ஆம் ஆத்மிக் கட்சி: மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

16th Dec 2019 10:45 PM

ADVERTISEMENT

மாணவா்களை தூண்டிவிட்டு அவா்களை பகடைக் காய்களாக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்துகிறது என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ஜாமியா மிலியா பகுதியில் அரசுப் பேருந்துக்களை தில்லி காவல் துறையினரே தீ வைத்ததாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அபாண்டமாக குற்றம்சாட்டியுள்ளாா். உண்மையில், அந்தப் பேருந்தை வன்முறையில் ஈடுபட்டவா்கள் தீ வைக்க முயற்சித்த போது, அதை காவல் துறையினா் தண்ணீா் ஊற்றி அணைத்தனா். இந்த விடியோவை எடிட் செய்து காவல் துறையினா் தீ வைத்ததுபோல மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டாா். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் அவா் பேசியுள்ளாா். இது தொடா்பாக விடியோ ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மியினா் மாணவா்களைத் தூண்டி விட்டு அவா்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த முயற்சிக்கிறாா்கள் என்றாா் மனோஜ் திவாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT