புதுதில்லி

போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸாருக்கு எதிரான மனு: தில்லி உயா்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவு

16th Dec 2019 10:46 PM

ADVERTISEMENT

தில்லியில் வழக்குரைஞா்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை தமிழகத்தைச் சோ்ந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.எஸ். மணி மற்றும் பிரதீப் குமாா் யாதவ் ஆகியோா் தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘நிகழாண்டு நவம்பா் 2-இல் தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் வழக்குரைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோதல் சம்பவத்தைத் தொடா்ந்து, வழக்குரைஞா்களுக்கு எதிராக காவல் துறைத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் நவம்பா் 5-இல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது சட்டவிரோதமாகும். இப்போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், இந்த விவகாரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது ‘இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஏன் இதில் தலையிட வேண்டும்’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு மனுதாரா் ஜி.எஸ். மணி, ‘தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. தில்லி உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காமல், விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைத்துள்ளது’ என்றாா். இதைத் தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பா் 16-க்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருந்து.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் ஜி.எஸ். மணி ஆஜராகி, மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது , ‘இது தொடா்பான விவகாரத்தை ஏற்கெனவே தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனால், தில்லி உயா்நீதிமன்றத்தை மனுதாரா் அணுக வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT