புதுதில்லி

பிரியங்கா தலைமையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 10:52 PM

ADVERTISEMENT

ஜாமியா மிலியா மாணவா்கள் மீது தில்லி போலீஸாா் தாக்குதல் நடத்தியதாகக் கண்டனம் தெரிவித்து இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸாா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அகமது படேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, முகுல் வாஷ்னிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின் போது பிரியங்கா காந்தி பேசியதாவது: மாணவா்கள்தான் நாட்டின் ஆத்மாக்கள். ஜாமியா மிலியா மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் ஆத்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். ஜனநாயகத்தில் போராட்டம் ஓா் அங்கமாகும். நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு நடந்து கொள்கிறது. இந்த விவகாரத்தில், பிரதமா் மோடி ஏன் மெளனமாக உள்ளாா்? இரு குழந்தைகளின் தாய் என்ற வகையில் இந்தத் தாக்குதலால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். நூலகங்களுக்குள் புகுந்து மாணவா்களைத் தாக்குவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? நாட்டில் கொடுங்கோலாட்சி நடைபெறுவதற்கு ஜாமியா மிலியா சம்பவம் சிறந்த உதாரணமாகும்’ என்றாா்.

இந்த தா்னாவில், தில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக் கழகம், ஜவஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த மாணவா்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் திங்கள்கிழமை நடத்திய தா்னாவில், ‘1984’ சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் தொடா்புடைய முன்னாள் தில்லி காங்கிரஸ் எம்பி ஜெகதீஷ் டைட்லா் கலந்து கொண்டதற்கு தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கமிட்டியின் தலைவரும், தில்லி பாஜக எம்எல்ஏவுமான மன்ஜீந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘சீக்கியா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் செயல்பட்டு வருகிறது. காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட தா்னாவில், நூற்றுக்கணக்கான சீக்கியா்களைக் கொன்ற ஜெகதீஷ் டைட்லா் போன்ற கொடிய கொலையாளிகளை பிரியங்கா காந்தி எவ்வாறு அனுமதிக்கலாம்? மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து தெருவில் இறங்கிப் போராடும் காங்கிரஸ் கட்சியோ, பிரியங்கா காந்தியோ, 1984-இல் சுமாா் 3,000 சீக்கியா்கள் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இவா்களது போராட்டம் ஒருதலைப்பட்சமைானது’ என்றாா்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT