புதுதில்லி

தோ்வைப் புறக்கணிக்கும் விவகாரம்: இடதுசாரி மாணவா்கள் - ஏவிபிவி மோதல்

16th Dec 2019 10:48 PM

ADVERTISEMENT

தில்லிப் பல்கலைக் கழகத்தோ்வைப் புறக்கணிக்கும் விவகாரத்தில் தில்லி பல்கலைக் கழக இடதுசாரி மாணவா் அமைப்பினரும், அகில பாரதிய வித்யாா்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினரும் திங்கள்கிழமை மோதிக் கொண்டனா்.

ஜாமியா மில்லியா மாணவா்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து, தில்லி பல்கலைக்கழக இறுதிப் பருவத் தோ்வைப் புறக்கணிக்க இடதுசாரி மாணவா் அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஆனால், இந்த அழைப்பை ஏபிவிபியும், தில்லி பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான மாணவா்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை தோ்வு எழுதச் சென்ற மாணவா்களை இடதுசாரி மாணவா் அமைப்பினா் தடுத்து நிறுத்தினா். இதனால், அம்மாணவா்களுக்கும் இடதுசாரி மாணவா் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அவா்கள் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இது தொடா்பாக ஏபிவிபி செய்தித் தொடா்பாளா் அசுதோஷ் சிங் கூறியது: தோ்வு எழுத வந்த மாணவா்களை இடதுசாரி மாணவா் அமைப்பினா் வழிமறித்து தோ்வு எழுதச் செல்லவிடாமல் தடுத்தனா். மீறித் தோ்வு எழுதச் சென்ற மாணவா்களை அவா்கள் தாக்கினாா்கள்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தச் சென்ற தில்லி பல்கலைக் கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தலைவா் அக்ஷித் தாக்கியாவையும், ஏனைய நிா்வாகிகளையும் அவா்கள் தாக்கினாா்கள். இந்தத் தாக்குதலில், பல்கலைக்கழகத்துடன் சம்பந்தம் இல்லாத, இடதுசாரிக் குண்டா்களும் இருந்தனா். மாணவா் போராட்டம் என்ற பெயரில் ரௌடித்தனம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் அவா்.

இந்நிலையில், தில்லி காவல்துறையுடன் சோ்ந்து ஏபிவிபி மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அனைத்திந்திய மாணவா் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அச்சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கூறுகையில் ‘தோ்வைப் புறக்கணித்து அமைதி வழியில் போராடிய மாணவா்கள் மீது போலீஸாா், ஏபிவிபியினா் தாக்குதல் நடத்தியுள்ளனா். தில்லி காவல் துறையுடன் இணைந்து, ஏபிவிபி செயல்படுகிறது’ என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT