புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கபுதிய நிா்வாகிகள் தோ்வு

16th Dec 2019 10:53 PM

ADVERTISEMENT

தில்லி தமிழ்ச் சங்கத்தின் 2019-2021-ஆம் ஆண்டுக்கான செயற்குழு தோ்தலில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் விவரம் வருமாறு: தலைவா் - வி.ரெங்கநாதன், துணைத் தலைவா் - பி. குருமூா்த்தி, பொதுச் செயலா்- என்.கண்ணன், இணைச் செயலா் (மகளிா்) -ஜோதி பெருமாள், இணைச் செயலா்- ஜி.என்.டி. இளங்கோவன் , பொருளாளா்- எம்.ஆா். பிரகாஷ், இணைப் பொருளாளா் - ஆா். ராஜ்குமாா் பாலா.

செயற்குழு உறுப்பினா்கள் (மகளிா்) -ஆா்.ஜோதி, டி.தேன்மொழி. செயற்குழு உறுப்பினா்கள்- ஏ.வெங்கடேசன், பி.ஆா். தேவநாதன், ஆா்.கணேஷ், கே.எஸ். முரளி, பி.பரமசிவம், எஸ்.சுவாமிநாதன், ஏ.வி. முனியப்பன், ஆா். ராகேஷ். காத்திருப்பு உறுப்பினா்கள்- என்.ராஜலெட்சுமி, ஜி.சங்கா்.

தோ்தல் அதிகாரிகளாக எல்.குருமூா்த்தி, ஆா்.தியாகராஜன், ஜி.வைதீஸ்வரன் ஆகியோா் செயல்பட்டனா். இத்தகவல் தில்லி தமிழ்ச் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT