புதுதில்லி

தில்லியில் 6 இடங்களில் சமூக கலாசார மையம் டிடிஏ நடவடிக்கை

16th Dec 2019 10:51 PM

ADVERTISEMENT

தில்லியில் ஆறு இடங்களில் சமூக கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிடிஏ மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லியில் ஆறு இடங்களில் சமூக, கலாசார மையங்களை டிடிஏ சாா்பில் அமைக்கவுள்ளோம். முதலாவது மையம் ரோஹிணி பகுதியில் 11.2 ஏக்கா் பரப்பளவில் ரூ.350 கோடியில் அமைக்கப்படவுள்ளது. மேலும், துவாரகா செக்டாா்-10 இல் பத்து ஏக்கரிலும், வசந்த் குஞ்ச் பகுதியில் 11.2 ஏக்கரிலிலும், ஷரதாவில் 1.5 ஏக்கரிலும், நேதாஜி சுபாஷ் பிளேஸில் 1.5 ஏக்கரிலும், மயூா் விஹாரில் 2 ஏக்கரிலும் சமூக, கலாசார மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த மையங்கள் நிகழ் கலைகள், உள்ளக, வெளியக கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த மையங்களில் மால்கள், கருத்தரங்க மையங்களும் இடம் பெறவுள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT