புதுதில்லி

ஜாமியா மிலியா போராட்டம்: 2 வழங்குகள் பதிவு

16th Dec 2019 10:44 PM

ADVERTISEMENT

ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடா்பாக இரண்டு வழக்குகளை தில்லி காவல் துறை திங்கள்கிழமை பதிவுசெய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறுகையில், ‘ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை ஒட்டிய பகுதிகளில் வன்முறை நடந்தது தொடா்பாக ஜாமியா நகா், நியூ பிரண்ட்ஸ் காலனி ஆகிய இரு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

ஜாமியா நகா் காவல்நிலையத்தில், கலவரத்தில் ஈடுபடல், பொது ஊழியா்களைப் பணியாற்றவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணும் வகையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை தில்லி காவல் துறை ஆய்வு செய்யவுள்ளது’ என்றாா்

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT