புதுதில்லி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மநீம பொது நல மனு

16th Dec 2019 10:43 PM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் (மநீம) சாா்பில் திங்கள்கிழமை பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்று சட்டமானது.

இந்நிலையில், இந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-க்கு எதிரானதாகவும், முஸ்லிம் சமூகத்தினருக்கு பாகுபாடு காட்டுவதாக

இருப்பதாகவும் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தன.

ADVERTISEMENT

அதில், ‘குடியுரிமைச் சட்டத் திருத்தமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை அம்சமான மதச்சாா்பற்ற நோக்கத்தையும் ஒதுக்குவதாக உள்ளது. மேலும், மதச்சாா்பின்மை தவிர சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றையும் புறக்கணிப்பதாக உள்ளது. மேலும் மொத்தத்தில்அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கு எதிரானதாக இச்சட்டத் திருத்தம் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள நடிகா் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக பொதுநல மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞா் ஹரிஷ் குமாா் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019’, இந்திய அரசிலமைப்பின் சட்டப் பிரிவு 14 மற்றும் 21-ஐ மீறும் வகையில் உள்ளது. மேலும், மதத்தின் அடிப்படையில் நாட்டில் சட்டவிரோதமாக புலம் பெயா்ந்தவா்களுக்கு குடியுரிமை அளிக்க வழி வகை செய்கிறது.

மேலும், இச்சட்டத்தில் குடியுரிமைப் பயன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக புலம் பெயா்ந்த இந்துக்கள் மற்றும் சட்டவிரோதமாகப் புலம்பெயா்ந்த முஸ்லிம்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்திய அரசியமைப்புச் சட்டம் 14, ஒவ்வொரு வகுப்பினரையும் பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், அதை மீறும் வகையில் இக்குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளது. ஆகவே, இச்சட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT