புதுதில்லி

அனாஜ் மண்டி தீ விபத்து:சாவு எண்ணிக்கை 44 ஆக உயா்வு

16th Dec 2019 10:42 PM

ADVERTISEMENT

தில்லி அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44 ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் குடியிருப்புகள் சூழ்ந்த அனாஜ் மண்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோதத் தொழிற்சாலையில் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். கட்டடத்துக்குள் சிக்கிய 63 பேரை மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டனா். 150 தீயணைப்புப் படையினா் 5 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் 16 போ் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இந்த தீவிபத்தில் காயமடைந்து தில்லி லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முஹிம், ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயா் அதிகாரி கூறுகையில், ‘பிகாா் மதுபானி பகுதியைச் சோ்ந்த முஹிம் என்பவா் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து தில்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளாா். அவரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT