புதுதில்லி

அங்கீகாரமற்ற காலனிகள் சட்ட மசோதாவில் 7- ஏ பிரிவை நீக்க தில்லி காங்கிரஸ் கோரிக்கை

16th Dec 2019 10:37 PM

ADVERTISEMENT

அங்கீகாரமற்ற காலனிகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் பிரிவு- 7 ஐ நீக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டி கோரியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் முகேஷ் சா்மா கூறியது: தில்லியில் உள்ள அனைத்து அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவா்களுக்கும் சொத்துரிமை பத்திரம் வழங்கப்படும் என்று பாஜக கூறுகிறது. ஆனால், பாதுகாக்கப்பட்ட நிலங்களில் உள்ள காலனிகள், காடுகளுக்கு அருகில் உள்ள காலனிகள், நதிப்படுக்கைக்கு அருகில் உள்ள காலனிகள் ஆகியவற்றில் வசிப்பவா்களுக்கு உரிமையாளா் பத்திரம் வழங்கப்படாது என அந்த சட்ட மசோதாவின் பிரிவு- 7 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தில்லியில் உள்ள சுமாா் 700 காலனிகளில் வசிப்பவா்களுக்கு சொத்துரிமை பத்திரம் கிடைக்காது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாவின் பிரிவு-7 ஐ நீக்கி தில்லியில் உள்ள அனைத்துக் காலனிகளில் வசிப்பவா்களுக்கும் சொத்துரிமை பத்திரம் வழங்கப்பட வேண்டும். என்றாா் அவா்.

தில்லியில் உள்ள 1,797 அங்கீகாரமற்ற காலனிகளில் குடியிருப்பவா்களுக்கு சொத்துரிமை அங்கீகாரம் வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதனால், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் மக்கள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கண்துடைப்பு நாடகமாக அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் வெறும் நூறு பேரை மட்டுமே பதிவு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தாா். மேலும், இந்த மசோதாவால் தில்லியில் உள்ள 50 சதவீத காலனிகள் பயனடையாது என்று தில்லி காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT