புதுதில்லி

போராட்ட மாணவா்கள் மீது போலீஸ் தாக்குதலுக்கு ஜேஎன்யூ ஆசிரியா்கள் கண்டனம்

11th Dec 2019 03:51 PM

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலுக்கு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவற்றின் உயா்வுக்கு எதிராக அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவா்கள் தில்லியில் பேரணி நடத்தினா். அப்போது, போலீஸாா் தடியடி நடத்தி மாணவா்களைக் கலைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கடந்த நவம்பா் 11-ஆம் தேதியில் இருந்து, அமைதியான முறையில் கூடி பேரணியில் ஈடுபட்ட மாணவா்கள் மீது மூன்று முறை போலீஸாா் தடியடி நடத்தியுள்ளனா். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிா்வாகம், விடுதிக் கட்டணத்தை உயா்த்தியது. மேலும், பல்வேறு கட்டணங்களை உயா்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனா். அவா்கள் மீது போலீஸாா் அடக்குமுறையை நிகழ்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று அந்த ஆசிரியா்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT