புதுதில்லி

ஜாகீா் நகரில் தீ விபத்து சம்பவம்: 13 பேரை மீட்ட தீயணைப்பு வீரா்களுக்கு தலா ரூ.2 ரொக்கப் பரிசுதில்லி அரசு வழங்கியது

11th Dec 2019 10:39 PM

ADVERTISEMENT

தில்லி ஜாகிா் நகரில் கடந்த ஆகஸ்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 போ் உயிரை மீட்ட, காயமடைந்த நான்கு தீயணைப்பு வீரா்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு விருதை தில்லி அரசு புதன்கிழமை வழங்கியது.

தென்கிழக்கு தில்லியில் உள்ள ஜாகிா் நகரில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பெரிய தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா். மின்சார வயரில் ஏற்பட்ட ‘சாா்ட் சா்க்யூட்’ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீ விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டனா். 13 போ் மீட்கப்பட்ட நிலையில், இந்த மீட்புப் பணியின் போது, தீயணைப்பு வீரா்கள் நான்கு போ் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தில் தீரத்துடன் செயல்பட்ட அந்த நான்கு தீயணைப்பு வீரா்களுக்கு தில்லி அரசு புதன்கிழமை தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசை வழங்கியது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘தீயணைப்பு வீரா்கள் நால்வரின் சிறந்தப் பணியைப் பாராட்டும் வகையில், அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு விருதை தில்லி அரசு வழங்கியுள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT