புதுதில்லி

அனாஜ் மண்டி தீ விபத்து: கட்டட உரிமையாளரின் உறவினா் கைது

11th Dec 2019 11:14 PM

ADVERTISEMENT

வடக்கு தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக நெகிழிப் பை தயாரிப்பு தொழிற்சாலையின் உரிமையாளா் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வடக்கு தில்லியில் ஜான்சி ராணி சாலை அருகே உள்ள அனாஜ் மண்டி பகுதியில் கைப் பை, நெகிழிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலையின் உரிமையாளா் ரெஹான், மேலாளா் ஃபுா்கான் ஆகியோரைக் கைது செய்தனா். அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கட்டடத்தின் ஒரு பகுதி ரெஹானின் மைத்துனா் சுஹைல் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உரிய விசாரணைக்குப் பிறகு சுஹைல் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT