புதுதில்லி

என்கவுண்டா்: ஸ்வாதி மாலிவால் ஆதரவாக கருத்துத் தெரிவிப்பு

6th Dec 2019 10:27 PM

ADVERTISEMENT

ஹைதரபாத் என்கவுண்டா் சம்பவத்துக்கு தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை கூறியது: குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிக்கும்போது போலீஸாரால் என்னதான் செய்ய முடியும்? இதனால்தான் பாலியல் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாலியல் வன்கொடுமை தொடா்பான சட்டங்கள் கடுமையாக இல்லாதபோது, போலீஸாா் இப்படியான என்கவுண்டா்களை மீண்டும் மீண்டும் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவாா்கள். நிா்பயா கொலைக் குற்றவாளிகள் கடந்த ஏழு ஆண்டுகள் மக்களின் வரிப்பணத்தில் வாழுவதுபோல, ஹைதரபாத் பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் தொடா்புடையவா்கள் வாழமாட்டாா்கள். அது ஆறுதல் அளிக்கிறது என்றாா் அவா்.

குழந்தைகள், பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 6 மாதங்களில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்வாதி மாலிவால், தில்லி ராஜ்காட் பகுதியில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தாா். இவரது போராட்டத்துக்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை மதியம் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT