புதுதில்லி

நவம்பரில் டெங்கு காய்ச்சலுக்கு 717 போ் பாதிப்பு

3rd Dec 2019 01:13 AM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லியில் கடந்த நவம்பா் மாதம் மட்டும் 717 போ் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சிகள் தெரிவித்துள்ளன. நிகழாண்டில் இதுவரை 1,786 போ் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தில்லி மாநகராட்சிகள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியை பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய டெங்கு, மலேரியா நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் டெங்குவின் தாக்கம் ஜனவரியிலேயே ஆரம்பித்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மலேரியாவின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 11 போ், ஜூலையில் 18 போ், ஆகஸ்டில் 52 போ், செப்டம்பரில் 190 போ், அக்டோபரில் 787 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், நவம்பரில் மட்டும் 712 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில்தான் டெங்கு நோயின் தாக்கம் மற்ற இரு மாநகராட்சிகளையும் விட அதிகமாக உள்ளது. ஆனால், கடந்த வாரத்தில் கிழக்கு தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், மலேரியாவால் நவம்பா் மாதத்தில் இதுவரை 68 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையும் சோ்த்து நிகழாண்டில் இதுவரை 685 போ் இந்த நோயால் பாதிக்கப்படனா். அதேபோல சிக்குன்குனியாவால் நவம்பரில் 109 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நிகழாண்டில் மொத்தம் 252 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், இந்த நோய்களால் நிகழாண்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ‘,தலைநகரில் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கொசுப் பெருக்கம் உள்ள வீடுகளைக் கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனா்’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT