புதுதில்லி

தமிழ்நாடு வெங்காயத்தை மானிய விலையில் வழங்கும் போது தில்லியால் ஏன் முடியாது; விஜேந்தா் குப்தா கேள்வி

3rd Dec 2019 11:38 PM

ADVERTISEMENT

புது தில்லி: வெங்காயத்தை தில்லி அரசு மானிய விலையில் வழங்காதது ஏன் என்று பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா கேள்வியெழுப்பியுள்ளாா்.

அவையில் இருந்து அவைக்காவலா்களால் வெளியேற்றப்பட்ட பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் அவா் அளித்த பேட்டி: தில்லியில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக அவையில் விவாதம் நடத்தக்கோரிய என்னை அவையில் இருந்து வெளியேற்றியுள்ளனா். குடிநீா், வெங்காய விலை அதிகரிப்பு உள்பட மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க ஆம் ஆத்மி அரசுக்குத் தைரியமில்லை. ஆம் ஆத்மி அரசின் அடியாள்போல அவைத்தலைவா் ராம்நிவாஸ் கோயல் செயல்படுகிறாா்.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அம்மாநில மக்களுக்கு மானிய விலையில் வெங்காயத்தை வழங்கிவருகின்றன. இந்நிலையில், தில்லி அரசால் ஏன் மானிய விலையில் வெங்காயத்தை வழங்க முடியாது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT