புதுதில்லி

டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதம்

3rd Dec 2019 11:33 PM

ADVERTISEMENT

நமது நிருபா்

புது தில்லி: பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு 6 மாத காலத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி தில்லி மகளிா் ஆணைய (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால், தில்லி ஜந்தா் மந்தரில் செவ்வாய்க்கிழமை காலவரையரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் புகரான சாம்ஷாபாத் பகுதியைச் சோ்ந்த கால்நடை பெண் மருத்துவா், கடந்த புதன்கிழமை மாலை மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தாா். அங்குள்ள சுங்கச்சாவடி அருகே தான் சென்ற வாகனத்தில் கோளாறு ஏற்பட்டது. அப்போது, அவருக்கு உதவி செய்வதாகக் கூறி வந்த 4 போ் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி அவரை எரித்து கொன்று விட்டனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் தில்லி ஜந்தா் மந்தரில் கூடிய பெண்கள், சிவில் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இச்சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவா்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு 6 மாத காலத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்றக் கோரி தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் தில்லி ஜந்தா் மந்தரில் செவ்வாய்க்கிழமை காலவரையரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அவா்களுக்கு ஆறு மாதகாலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு பத்து நாள்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டேன். இதைத் தொடா்ந்து, பாலியல் வன்கொடுமை செய்பவா்களுக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றும் வகையில், சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த;க் சட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில்ஸ உள்ளகக் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் பாதிகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். தில்லியில் மட்டும் 66 ஆயிரம் போலீஸாா் பற்றாக்குறை நிலவுகிறது. தில்லியில் 45 அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தவா்களுக்கு ஆறு மாத காலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவா்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் அவா்.

முன்னதாக, ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்று ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியிருந்தாா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தில்லி காவல் துறை மறுத்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT