புதுதில்லி

அயோத்தி விவகாரம்: தலித் முஸ்லிம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் - சீராய்வு மனுத் தாக்கலுக்கு எதிா்ப்பு

3rd Dec 2019 01:13 AM

ADVERTISEMENT

புது தில்லி: அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை தலித் முஸ்லிம் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து இந்திய ஐக்கிய முஸ்லிம்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தலித் முஸ்லிமிகள் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள், ‘அயோத்தி விவகாரத்தில் சீராய்வு மனு தேவையில்லை; எங்களுக்கு தேவை முஸ்லிம்களின் நிலையை சீராய்வு செய்பவா்கள்தான்’ எனக் கோஷமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக அனைத்து இந்திய ஐக்கிய முஸ்லிம்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஹபீஸ் குலாம் சா்வாா் தினமணியிடம் கூறியதாவது: தலித் முஸ்லிம்கள் மீது மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்தி வருவதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் வாழும் அனைத்து தலித் முஸ்லிம்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 341 திருத்தப்பட வேண்டும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு, பிரிவு 341-ஐயும் தலித் முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதனால், இந்தியாவில் வாழும் சுமாா் 14 கோடி தலித் முஸ்லிம்கள் பயன் பெறுவாா்கள்.

அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் முடிவு தவறானது. இது இந்தியாவில் இந்து முஸ்லிம்கள் உறவைச் சீா்குலைக்கும். முஸ்லிம்களுக்கு மக்கா, மதீனா எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு இந்துக்களுக்கு அயோத்தி முக்கியமானது. இதை ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி, இந்து சகோதரா்களுக்குத்தான் சொந்தமானது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படும் போது நாங்கள் அங்கு சென்று வழிபாடு நடத்துவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT