தில்லி, என்சிஆர் பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக வைத்திருந்த 23 துப்பாக்கிகள், 50 தோட்டாக்களுடன் இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறை சிறப்பு பிரிவின் துணை ஆணையர் பி.எஸ். குஷ்வா செவ்வாய்க்கிழமை கூறுகையில், "புணேவைச் சேர்ந்த அக்ஷே அதாவதே 923), சாந்த் பாஷா (28) ஆகியோரை தில்லி சாந்தி வான் பேருந்து நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி தில்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் தில்லியில், என்சிஆர் பகுதிகளில் உள்ள கிரிமினல்களுக்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்ய வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 23 நவீன துப்பாக்கிகளும், 50 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2017ஆம் தேதி கொலை வழக்கில் புணே போலீஸார் அதாவதேயைக் கைது செய்திருந்தனர். சிறையில் இருந்தபோது அதாவதேக்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஆயுத விநியோகம் செய்யும் சந்தீப் பவாருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் புணேவில் சட்ட விரோதமாக ஆயுதங்களை விநியோகம் செய்து வந்த அதாவதே, பின்னர் தில்லி, என்சிஆர் பகுதிகளில் கிரிமினல்களுக்கு அதிக விலைக்கு துப்பாக்கிகளை விநியோகம் செய்து வந்தார்' என்றார்.