ரஃபேல் போர் விமானங்களில் உதிரி பாகங்களை இணைக்கும் பணியில் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்த ஐடிஐ (தொழிற்கல்வி) மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ரஃபேல் போர் விமான தயாரிப்பில் பிரான்ஸைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ரஃபேல் விமான பாகங்களை இணைக்கும் படிப்பை நாகபுரி ஐடிஐ நிறுவனத்தில் தொடங்குவதற்கு அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதில் சேர்ந்து 2 ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் ரஃபேல் விமானத் தயாரிப்பில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதுகுறித்து நாகபுரி ஐடிஐ முதல்வர் ஹேமந்த் அவாரே கூறுகையில், "இந்த நிதியாண்டில் (2019-2020) அந்தப் படிப்பை தொடங்கத் திட்டமிட்டு வருகிறோம். தலா 21 பேர் கொண்ட 2 பிரிவுகள் ஏற்படுத்தப்படும்' என்றார்.