புதுதில்லி

முதலாவது பெண் டிஜிபி காஞ்சன் செளத்ரி மறைவுக்கு கேஜரிவால் இரங்கல்

28th Aug 2019 07:58 AM

ADVERTISEMENT

நாட்டின் முதலாவது பெண் டிஜிபியான காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யாவின் (72) மறைவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1973- ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் செளத்ரி. அவர் கடந்த 2004- இல் உத்தரகண்ட் மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார். சுமார் 3 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய காஞ்சன் செளத்ரி, கடந்த 2007, அக்டோபர் 31-இல் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
அதன் பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சி சார்பாக கடந்த 2014-இல் உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், மும்பையில் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அவர் காலமானார். அவருக்கு கேஜரிவால் தனது சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேஜரிவால் கூறியிருப்பதாவது:
 நாட்டின் முதலாவது டிஜிபி காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா காலமானது தொடர்பாக அறிந்து வருந்துகிறேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்கள் பணியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். தனது இறுதி மூச்சு வரை நாட்டுக்காக அவர் உழைத்தார் என்று தெரிவித்துள்ளார் கேஜரிவால்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT