ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 10 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் தரூண் கபூர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "டிடிஏவைச் சேர்ந்த குரூப் பி அதிகாரிகள் 10 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணையும் அவர்கள் மீது நடைபெற்று வருகிறது. அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்றார்.