தில்லி தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் தமிழ்த் தென்றல் எனப் போற்றப்படும் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் பிறந்த தினம் சிறப்பாகக் கொண்டாப்பட்டது.
இதை முன்னிட்டு டிடிஇஏ பள்ளிகளில் திருவிகவின் தமிழ் நடையை, தனித் தமிழ் உணர்வை மாணவர்களிடம் ஊட்டும் வகையில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் திரு.வி.க.வின் தமிழ்ப் பற்று, தமிழ்ப் பணி ஆகியவற்றை மாணவர்கள் எடுத்துக் கூறினர்.
மேலும், அவரது படைப்புகளைப் பட்டியலிட்டு காட்சிப்படுத்தினர். அவர் குறித்த கவிதைகளையும் மாணவர்கள் வாசித்தனர்.
அந்தந்தப் பள்ளி முதல்வர்கள் திருவிகவின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.