புதுதில்லி

12 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

23rd Aug 2019 07:45 AM

ADVERTISEMENT

இரண்டு வழக்குகளில் கடந்த 12 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி ஜாமியா நகரைச் சேர்ந்தவர் முகம்மது யூசுஃப் (40). 2005, நவம்பர் 21-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார். அப்போது அவரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவரும் அவரது கூட்டாளிகளும் தப்பிச் சென்றனர்.
மேலும், அவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்தார். அவரைக் கண்டுபிடிக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர், காஷ்மீரில் தனது குடும்பத்தினருடன் இருந்து வந்துள்ளார். இவர் தேடப்படும் நபராக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
இந்நிலையில், முகம்மது யூசுஃப் ஜாகீர் நகர் பகுதிக்கு வரவுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஷாதரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT