புதுதில்லி

நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

18th Aug 2019 12:38 AM

ADVERTISEMENT


தில்லியில் நெகிழி பயன்பாட்டைத் தடைசெய்ய ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திர தின உரையில்  நெகிழி பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 50 மைக்ரான் அளவுக்கு குறைவான மக்காத நெகிழிகளுக்குத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை தில்லி அரசு சரியாக அமல்படுத்தவில்லை. தில்லியில் நெகிழி உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு தில்லி அரசு தடை விதிக்க வேண்டும். நெகிழி பைகளுக்கு மாற்றாக சணல், துணிப் பைகளைப் பயன்படுத்துவதை தில்லி அரசு ஊக்குவிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் தில்லியில் பெருமளவில் உபயோகிக்கப்படுகின்றன. தில்லி அரசு இதற்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT