புதுதில்லி

தலைநகரில் 2 நாள்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

18th Aug 2019 12:37 AM

ADVERTISEMENT


தலைநகர் தில்லியில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அடுத்த இரு தினங்களுக்கு (ஆகஸ்ட் 18, 19) மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
தில்லியில்  கடந்த வாரத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், கடந்த  இரண்டு நாள்கள் கடும் புழுக்கம் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.  
இந்நிலையில், சனிக்கிழமை  காலை முதல் மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை யிலேயே நகரில் பல்வேறு இடங் களில் பரவலாக மழை பெய்தது. 
இந்த மழை இரவு வரையிலும் நீடித்தது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாள்களாக கடும் புழுக்கத்தில் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சிடைந்தனர். 
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
தில்லியில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி குறைந்து 29  டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து  25.2 டிகிரி செல்சியஸாகவும்  பதிவாகியிருந்து என சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில்  92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 90 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. 
பாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 6  டிகிரி குறைந்து 28.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயர்ந்து 25.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி, மாலை 5.30 மணியளவில் ஒரே மாதிரியாக 92 சதவீதமாக இருந்தது. 
ஆயாநகரில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 6 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை  பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. 
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில்  98 சதவீதம், மாலையில் 92 சதவீதம் எனப் பதிவாகியிருந்தது. இதற்கிடையே, காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 7.3 மி.மீ., பாலத்தில் 4.8 மி.மீ., ஆயாநகரில் 9.7 மி.மீ. மழை  பதிவாகியிருந்தது. 
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாள்களிலும்  பொதுவாக வானம் மேமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஆங்காங்கே  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  
குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 -33 டிகிரி செல்சிஸயாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT