புதுதில்லி

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2019 06:28 AM

ADVERTISEMENT

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தினம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 
தில்லி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்கள் ஹாரூண் யூசுஃப், தேவேந்தர் யாதவ், ராஜேஷ் லிலோத்தியா ஆகியோர் கூட்டாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஹாரூண் யூசுஃப் பேசுகையில், "நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்டதே காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக தங்களது உயிரை நீத்தார்கள். நாடு இன்று அடைந்துள்ள உயரங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் போட்ட அடித்தளமே காரணமாகும்' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT