புதுதில்லி

தமிழ் அமைப்புகள் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

16th Aug 2019 06:28 AM

ADVERTISEMENT

தில்லியில் தமிழ் அமைப்புகள் சார்பில் சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு இல்லம்: வைகை தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ் மக்வானாவும், பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானிவும் தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்ல இணை உள்ளுறை ஆணையர் என்.இ. சின்னத்துரை மற்றும் தமிழ்நாடு இல்லப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
தமிழ்ச் சங்கம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை காலையில் தேசியக் கொடியேற்றப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் இந்துபாலா, துணைத் தலைவர் கி. பென்னேஸ்வரன், இணைச் செயலாளர் எம். ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். லட்சுமணன், பெரியசாமி மற்றும் தில்லிவாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செந்தமிழ்ப் பேரவை: தில்லி செந்தமிழ்ப் பேரவை சார்பில் மயூர் விஹார் பேஸ்-3 பாக்கெட்-6 நகராட்சி மைதானத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த அமைப்பின் தலைவர் மாரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினர்களாக இஷ்ட சித்தி விநாயகர் கோயில் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி, இணை செயலர் சேகர், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தனும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், தில்லி செந்தமிழ்ப் பேரவையின் துணைச் செயலர் கிரண் பாலாஜி, துணைப் பொருளாளர் சரவணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
தமிழர் நலக் கழகம்: தமிழர் நலக் கழகம் சார்பில் தில்லி மயூர் விஹார் பேஸ்-3 இல் நடைபெற்ற விழாவில், அந்த அமைப்பின் தலைவர் சுப்பையா தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அமைப்பின் பொதுச் செயலர் சிங்கத்துரை, உப தலைவர் கலியப்பெருமாள், பொருளாளர் பாஸ்கரன், துணைச் செயலர்கள் பிரசாத், சந்திரசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
செங்கோட்டை விழாவில் டிடிஇஏ மாணவர்கள்: தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக பாரம்பரிய உடையில் பார்வையாளர்களைக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானாவிடம் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி, பாவாடை - தாவணி, வேட்டி உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவை தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT