புதுதில்லி

சுதந்திர தின நிகழ்ச்சி: "புதிய இந்தியா' வடிவில் அணிவகுத்த மாணவிகள்

16th Aug 2019 06:28 AM

ADVERTISEMENT

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்பாக "புதிய இந்தியா' ( நயா பாரத் என்ற ஹிந்தி மொழி எழுத்துகளின்) வடிவில் பள்ளி மாணவிகள் அணிவகுத்துச் சென்றனர்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் பல அணிவகுப்புகள் நடைபெற்றன.
இதனிடையே, "புதிய இந்தியா' (நயா பாரத்) வடிவில் பள்ளி மாணவிகள் அணிவகுத்துச் சென்றது அனைவரையும் கவர்ந்தது. 
அணிவகுப்பில் பங்கேற்ற சில மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த அணிவகுப்பில் பங்கேற்ற மாணவி ஒருவர் கூறுகையில், " பிரதமர் மோடி எப்போதும் புதிய இந்தியாவை உருவாக்குவது குறித்தும், இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம் என்றும் கூறுகிறார். அதனால், "புதிய இந்தியா' வடிவில் அணிவகுத்தோம் என்றார். 
"புதிய இந்தியா' என்ற வார்த்தை, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாகும். 
நம் நாடு பல்வேறு துறைகளிலும் அதீத வளர்ச்சியடைந்து புதிய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே என் இலக்கு என்றும், அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் அடிக்கடி கூறுவது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT