புதுதில்லி

காஜியாபாத்: ஒரே நாளில் 9.58 லட்சம்  மரக்கன்றுகள் நடப்பட்டன

11th Aug 2019 01:00 AM

ADVERTISEMENT


தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் மாவட்டத்தில் அரசுத் துறைகள் சார்பில் ஒரே நாளில் 9.58 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 
வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 77-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: 
வெள்ளையனே வெளியே இயக்கத்தின் 77-ஆவது ஆண்டு  நினைவு நாளையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள காஜியாபாத் மாவட்டத்தில் 8.15 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் விஞ்சி வெள்ளிக்கிழமை 9.58 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 
அரசுத் துறைகள், அரசுத் துறைகள் அல்லாத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வர்த்தக அமைப்புகள்  ஆகியவை மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் பங்கேற்றன. இத்திட்டத்தில் பங்கேற்குமாறு காஜியாபாத் மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்று அதிகாரிகள் கூறினர். 
இது குறித்து ஆட்சியர் கூறுகையில் இந்த நாள் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். 100 வயதுக்கு மேற்பட்ட மரங்கள் வனத் துறையால் பாதுகாக்கப்படும். மரங்களை வெட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற பகுதிகளில் வீட்டுவசதி சங்கங்கள் வீடு கட்டுவதற்கு  வனத்துறை அனுமதி கூட வழங்காது' என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT