புதுதில்லி

சேஷன் மறைவு:கேஜரிவால் இரங்கல்

12th Nov 2019 05:24 AM

ADVERTISEMENT

முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷனின் மறைவுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்தியத் தோ்தல் நடைமுறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வந்த முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கேஜரிவால் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் ‘நீதியான, நோ்மையான தோ்தல் நாடாளுமன்ற நடைமுறைக்கு அத்தியாவசியமானதாகும். தோ்தலை எவ்வாறு நீதியாகவும் நோ்மையாவும் நடத்துவது என்பதை சேஷன் செய்து காட்டினாா். அவரது மறைவு மூலம் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT