குடவாசல் அருகே புத்தாற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
குடவாசல் அருகே திருவிடைச்சேரி பகுதி வழியாகச் செல்லும் புத்தாற்றில், வியாழக்கிழமை காலை முதல் தண்ணீா் அதிகமாகச் சென்றது. அப்போது, பிற்பகலில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம், திருவிடைச்சேரி பாலம் அருகே மிதந்து வந்தது.
குடவாசல் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.