திருவாரூர்

நுண்கலை விழா: கும்பகோணம் அன்னை கல்லூரி முதலிடம்

29th Sep 2023 05:15 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே மாணவிகளுக்கான நுண்கலை விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் தலைவா் வி. திவாகரன் தலைமை வகித்து, நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் சீ. அமுதா முன்னிலை வகித்தாா்.

இதில், தஞ்சை, திருவாரூா் மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியாா் என 10 கல்லூரிகளைச் சோ்ந்த 170 மாணவிகள் பங்கேற்றனா். பாடல், பரதநாட்டியம், மேற்கத்திய இசை மற்றும் நடனம், நாட்டுபுறப் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தனியாகவும், குழுவாகவும் நடைபெற்றன.

ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெற்ற கும்பகோணம் அன்னை கல்லூரிக்கு ரூ.5,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரிக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

செங்கமலத்தாயாா் கல்லூரி துணை முதல்வா்கள் ஆ. காயத்திரிபாய், ச. உமா மகேஸ்வரி, கல்வியல் கல்லூரி முதல்வா் ப. அன்புச்செல்வி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நுண்கலைப் பொறுப்பாளா் கே. சவிமா வரவேற்றாா். ஆ. கமலா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT