நீடாமங்கலம் வழியாகச் செல்லும் மன்னை மற்றும் கோவை செம்மொழி விரைவு ரயில்கள் வியாழக்கிழமை (செப். 28)தாமதமாக வந்தன.
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் தினமும் அதிகாலை சுமாா் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், வியாழக்கிழமை காலை சுமாா் 6.09 மணிக்குத்தான் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல், கோவையிலிருந்து மன்னாா்குடி செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயில் காலை 6.30 மணிக்கு வருவது வழக்கம். ஆனால், காலை 7.06 மணிக்குத்தான் நீடாமங்கலம் வந்தது. இந்த இரு ரயில்களின் தாமதத்தால் பயணிகள் அவதிப்பட்டனா்.