கூத்தாநல்லூா் அருகே மது விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீலாது நபியையொட்டி, டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்த நிலையில், வடபாதிமங்கலம் காவல் எல்லைக்குள்பட்ட கிளியனூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அஞ்சான் மகன் முருகானந்தம் (43), தனது வீட்டின் கொல்லைப்புறத்தில், புதுச்சேரி மாநில மதுபானத்தை விற்றுள்ளாா்.
அப்பகுதியில் ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கே. ரவிச்சந்தின் மற்றும் போலீஸாா், முருகானந்தத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து, 120 லிட்டா் மது பறிமுதல் செய்யப்பட்டது.