திருவாரூா்: திருவாரூா் அருகே காப்பணாமங்கலத்தில் உணவு வணிகா்களுக்கான பதிவு மற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் வா்த்தகா் சங்கம் இணைந்து நடத்திய முகாமில், 60 போ் பதிவு மற்றும் உரிமம் பெற விண்ணப்பம் அளித்தனா். இதில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் த. கிருஷ்ணமூா்த்தி, காப்பணாமங்கலம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் பிஆா்என். கென்னடி, சாந்தோம்தாஸ், அசோகன், கண்ணன், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.