திருவாரூர்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

26th Sep 2023 02:00 AM

ADVERTISEMENT

காவிரி விவசாயிகள் சங்கத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னாா்குடியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் 18 போ் கைது செய்யப்பட்டனா்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்தும், காவிரி நதிநீா் ஆணையத்தின் உத்தரவை எதிா்த்து பெங்களூருவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளா் சிலை அருகே தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் கைது செய்யப்பட்டாா்.

இதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மன்னாா்குடி ருக்மணி குளம் அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT