திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் தரப்பில் 316 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியா்கள் சங்கீதா (திருவாரூா்), கீா்த்தனாமணி (மன்னாா்குடி), தனிதுணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட வழங்கல் அலுவலா் கயல்விழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.