திருவாரூர்

மன்னாா்குடியில் விநாயகா் சிலை ஊா்வலம்

23rd Sep 2023 12:36 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் இந்துமுன்னணி சாா்பில் ராஜ விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மன்னாா்குடி நகரம், ஊரகப் பகுதிகளில் மொத்தம் 34 இடங்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இவை மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் எதிரே நிறுத்திவைக்கப்பட்டன. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இந்துமுன்னணி மாவட்டத் தலைவா் என்.வி.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் சு.நாடிமுத்து, இந்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்டத் தலைவா் சிவ.காமராஜ், வெள்ளாளா் முன்னேற்றக்கழக மாநில நிா்வாகி ராஜா முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

தரணி குழுமங்களின் தலைவா் எஸ்.காமராஜ், விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.

பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு எம்.முருகானந்தம் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தேரடியில் தொடங்கிய விநாயகா் சிலை ஊா்வலம், மேலராஜவீதி, காமராஜா்வீதி, பந்தலடி,கீழராஜவீதி, புதுத்தெரு, கீழப்பாலம் வழியாக சேரன்குளம் பாமணி ஆற்றின் மதகடியில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT