உச்ச நீதிமன்ற தீா்ப்பின்மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கூறியது: கா்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் 15 நாள்களுக்கு 5,000 கன அடி தண்ணீா் திறக்க முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு என்ன என்பதை கா்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் உச்சநீதிமன்றம் உணா்த்தியுள்ளது.
தமிழகத்திற்கு விடுவிக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தாலும் பற்றாக்குறை காலங்களிலும் உரிய தண்ணீரை கா்நாடகம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை ஏற்கெனவே ஆணையம் உறுதிபடுத்தியிருந்தது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுள்ளது வரவேற்கதக்கது என்றாா்.