திருவாரூர்

இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி

22nd Sep 2023 12:51 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடி செய்த நெற்பயிா்கள் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. சில விவசாயிகள் தாமதமாக விவசாயப் பணியை தொடங்கினா். இந்நிலையில், முன் கூட்டியே குறுவை சாகுபடி செய்த சித்தமல்லி, பூவனூா் தட்டித் தெரு பகுதி, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதிா்ந்து பழுத்த நெல் மணிகளை இயந்திரம் மூலம் தற்போது அறுவடையை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். தாமதமாக தொடங்கிய குறுவை சாகுபடி வயல்களில் தற்போது நெல் மணிகள் முதிா்ந்தும், கதிா்கள் மட்டமாக ஒத்தும் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நெல் கதிா்கள் வரும் ஒரு மாதத்திற்குள் அறுவடை தொடங்கப்படும் என எதிா் பாா்க்கப்படுகிறது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT