திருவாரூர்

அக்.16-இல் காவல் வாகனங்கள் ஏலம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் பயன்பாடற்ற காவல் வாகனங்கள் பொது ஏலம் அக்.16-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருவாரூா் மாவட்ட காவல்துறையில் இயல்பு நிலையில் கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம், அக்.16-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். ஏலத்துக்குண்டான காவல் வாகனங்கள், அக்.15-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள், அக்.16-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ரூ.1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவா்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரியையும் சோ்த்து செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT