நீடாமங்கலம் - மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வே கேட் தண்டவாள பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில்கள், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.
இந்த ரயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் புதன் மற்றும் வியாழக்கிழமை (செப், 20,21) காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி புதன்கிழமை காலை 9 மணிக்கு சம்பாவெளி ரயில்வே கேட் மூடப்பட்டு தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.