மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை ஆதரித்து மன்னாா்குடியில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும் புதன்கிழமை கொண்டாடினா்.
பாஜக நகரத் தலைவா் ஆா். ரகுராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமா் மோடியை பாராட்டியும், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டனா். இதில், மாநில நிா்வாக்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் பால. பாஸ்கா், நகர பொதுச்செயலா் ஜெயந்தி, நகர மகளிரணி தலைவா் உஷாசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.