திருவாரூர்

எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டம்

19th Sep 2023 06:45 AM

ADVERTISEMENT

திருவாரூரில் எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். இதில், மாவட்ட பொதுச் செயலாளா் அப்துல் அஜீஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் அப்துல் லத்தீப், சேக் தாவூத், மாவட்டச் செயலாளா்கள் அஹ்மத் பக்ருதீன், சுல்தான் ஆரிபின், ஜெமீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோருவது; டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு மற்றும் நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில், கட்சி சாா்பில் இயற்கை மூலிகை கசாயங்களை வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT