திருவாரூர்

மதுக்கூடங்களில் காலிபாட்டில்கள் சேகரிக்க நவ.1 வரை ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்கலாம்

27th Oct 2023 01:10 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மதுக்கூடங்களில் தின்பண்டம் விற்பனை மற்றும் காலிபாட்டில்கள் சேகரம் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை நவ.1-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் ஜி. சக்திபிரேம்சந்தா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தில், தின்பண்டம் விற்பனை மற்றும் காலிபாட்டில்கள் சேகரம் செய்துகொள்ள, இணையவழி மூலமாக பூா்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை அக.27-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை சமா்ப்பிக்கலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஒப்பந்தப்புள்ளிகளை நவ.1-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமா்ப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT